Thursday, October 18, 2007
பெங்களூரில் குழந்தைகளுடன்
பெங்களூர் பதிவர்கள் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகள் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன்.
மோகன்தாஸ்::பெங்களூர் வலைபதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)
http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_15.html
மோகன்தாஸ் வருகை - பெண்கள் தெறித்து ஓட்டம் :
http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_17.html
தீபா::பங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு
http://thoduvanamnamullathil.blogspot.com/2007/07/blog-post_16.html
செந்தழல் ரவி::பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்...
http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_15.html
பெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு - அனுபவங்கள்
http://raamcm.blogspot.com/2007/07/blog-post_16.html
Friday, January 05, 2007
மதுரை மாரத்தான் அது மதுரை மாறத்தான்!
.
10 வருடங்களுக்கு முன் பிஸ்லரி குடிப்பது என்பது சாதரண மக்களால் வேடிக்கையாக பார்க்கப்பட்டும் ,பிஸ்லரி குடிப்பதை பெருமையாக கருதிய நடுத்தட்டு வர்க்கமும்,அதிலேயே வாழ்ந்த மேல்தட்டு வர்க்கமும் இருந்தது.இன்று பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் அனைவரும் பருகும் ஒரு சாதாரண விசயமாகிப் போய்விட்டது. கோக் ,பெப்ஸி போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு நம் தண்ணீரை நமக்கே விற்று காசு பார்க்கின்றன.இதில் கொடுமை என்னவென்றால் தாமிரபரணி போன்ற ஆற்றுவளங்களை கொள்ளை அடிக்கிறார்கள் இவர்கள், இதனைக் கேட்பாரில்லை.மக்களிடம் உள்ள ஒரு மேம்போக்கான பார்வையே நமக்கு உள்ள குறைபாடு.
மதுரை மாரத்தான் 2007 நிதி சேகரிப்புக்காக பலூன் மாமா
முன்பெல்லாம் மதுரை டீக்கடைகளில் வெளியே ஒரு ட்ரம்மில்(எவர் சில்வர் stainless steel) தண்ணீர் வைத்து ஒரு நசுங்கிப்போன ஒரு டம்ளர் தொங்கிக்கொண்டு இருக்கும். இப்போது அப்படி ஒன்றை பார்க்கவே முடியாது.கார்ப்பரேசன் தண்ணியையே 1 ரூபாய் பவுச்சில் விற்று காசு பார்கிறார்கள்.
நாம் தண்ணீர் பிரச்சனைக்காக சண்டை போடத அண்டை மாநிலங்களே கிடையாது.ஆனால் இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.அது போல் மழை வந்தால் ஒரே வெள்ளக்காடாகும் நகர்புறங்களில் அதை சேமிக்க தொலை நோக்குத் திட்டம் ஏதும் இல்லை. நீர்நிலைகள் மேம்படுத்தவும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,இராமநாதபுர மவட்டங்களில் மக்களுக்கு ஊருணி அமைத்துக் கொடுக்கவும் மதுரையில் வரும் சனவரி 13,2007 ல் பொது மக்கள் பங்கு கொள்ளும் குறைந்த தொலைவு மாரத்தான் நடைபெற உள்ளது.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை தலைமையாகக் கொண்டு ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான பத்திரிக்கை அறிவிப்புகள்:
http://www.maduraimarathon.in/media.php
இந்த நல்ல காரியத்தில் அனைவரும் பங்கு கொள்ளலாம்.
1.ஊரில் உள்ளவர்கள் நேரடியாக ரூ. 10/- கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.
2.வெளியூரில் உள்ளவர்கள் தாங்கள் பங்குபெற இயலாவிட்டாலும் ஓடுபவர்களுக்கு Sponsor செய்து உதவலாம்.
மதுரையில் அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான கொண்டாட்டம் இல்லை. சித்திரைத் திருவிழா பெரிய திருவிழாதான். ஆனால் அது மதம் கடவுள் சம்பந்தப்பட்டது. எனவே இந்த விழிப்புணர்வு ஓட்டம் ஒரு சமுதாயக் கொண்டாட்டமாகவும் இருக்கும் வண்ணம் அன்று முழுவதும் மருத்துவக் கல்லுரி மைதானத்தில் தண்ணீர் பற்றிய கலை நிகழ்ச்சியகள் உண்டு. விழாவிற்கு வருபவ்ர்க்ளின் பசி நீக்க உணவுக் கண்காட்சியுமுண்டு.அனைத்து நிகழ்ச்சிகளும் நீர் விழிப்புணர்வுக்காகவும் குறிப்பிட்ட நீர் நிலைகளை மேம்படுத்தவும் நடத்தப்படுவதால் மிக குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை மாமாணிகளும், மதுரையில் பெண் கொடுத்தோரும், பெண் எடுத்தோரும்,மற்றும் அனைத்து நண்பர்களும் தண்ணீர் பற்றிய இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்று, தண்ணீர் என்ற ஒரு அத்தியாவசியமான ஒரு இயற்கை வளத்தை காக்கவும் , அது வரும் தலைமுறைக்கும் கிடைக்கவும் உறுதியேற்று பங்களிக்க வேண்டுகிறேன்.
தமிழரின் நன்றித் திருநாளாம் பொங்கலை இந்த இயற்கை வளத்திற்கு நன்றி சொல்லி தொடங்குவோம்.அனைவரும் பங்கேற்பீர். பங்கு கொள்ள முடியாவிட்டாலும் நீர் வளம் காக்க நிதி அளிப்பீர்.
மேலதிகத் தகவலுக்கு http://www.maduraimarathon.in
குறிப்பு:
பிஸ்லரி = சுத்திகரிக்கப்பட்ட நீர்
Photocopy அனைத்தும் எப்படி Xerox ஆனதோ அது போல் அப்போது (இப்போதும் பல இடங்களில்) Mineral water அனைத்தும் பிஸ்லரியாகவே ஆனது.
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
Subscribe to:
Posts (Atom)