Friday, October 14, 2005

பதிவு07: CRY பாலூன் பார்க்கும் குழந்தைகள்

CRY சேவை அமைப்புக்காக நடத்தப்பட்ட Walk For Child Rights 2005 நிகழ்ச்சியில் பாலூன் மாமா

Date: Saturday, Oct 1st, 2005, Time: 10:30 AM Venue: North Cary Park, Cary, NC. We will be collecting tips for CRY

CRY க்காக அதன் தன்னார்வத் தொண்டர்களும் நடைப்பயணத்தில் கலந்து கொள்ளவந்த ஆர்வலர்களும் North Cary Park ல் அக்டோபர் 01,2005 சனிக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து வரத்தொடங்கிவிட்டனர். நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று இருந்தேன். நிகழ்ச்சியின் அமைப்பாளர் சரவணன் எனக்காக ஒரு பூத் அமைத்திருந்தார்.



இது போல் பல பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மருதாணி, Clown , Majic Show என்று பல பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

என்னுடைய பூத்திலேயே "கைரேகை ஜோசியம்" சொல்லும் எனது நண்பர் ஒருவர் இருந்தார். நானும் அவரும் அந்த பூத்தைப் பகிர்ந்து கொண்டோம்.

ஒவ்வொரு பூத்திலும் ஒரு கட்டணம் வசூலிக்கப் பட்டது. மொத்தமாக பணம் செலுத்தி டோக்கன் வாங்கிக் கொண்டவர்கள் அந்த அந்த பூத்திற்குத் தகுந்தவாறு டோக்கன் கொடுத்து சேவையைப் பெற்றனர்.

வந்திருந்த அனைத்துக் கலைஞர்களும் தங்களின் நேரத்தை CRYக்காக இலவசமா வழங்கினர். எங்களால் சேமிக்கப்பட்ட அனைத்துப் பணமும் CRY அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்கள் $10 கொடுத்து அவர்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு T-Shirt கொடுக்கப்பட்டது.

30 ல் இருந்து 40 குழந்தைகள் வரை வந்து இருந்தனர். 11:30 மணிவாக்கில் CRY நடைப்பயணம் ஆரம்பித்தது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் நடைப்பயணத்தை ஆரம்பித்தனர். சுமார் அரைமணி நேரம் கழித்து ஒவ்வொருவராக நடைப்பயணத்தை முடித்துவிட்டு வரத் தொடங்கினர்.



நடைப்பயணதில் கலந்து கொண்ட குழந்தைகள் போக பூங்காவிற்கு சும்மா வந்த மற்ற குழந்தைகளும் பலூன் மாமவைச் சுற்றிக் கொண்டனர். ஆகா பலூன் மாமா வசமா மாட்டிகிட்டார்.

அன்று நான் வண்ணத்துப்பூச்சி தொப்பி , பூ, போர்க் கத்தி (sword) ,கிளி, அன்னப் பறவை மற்றும் பலவிதமான தொப்பிகளைச் செய்து கொடுத்தேன். வந்தவர்கள் மிகவும் தாராளமாக நிதி வழங்கினர்.
சுமார் இரண்டரை மணி நேரம் குழந்தைகளுடன் குழந்தைகளாக செலவழித்தேன்.

பிங்க் பூ தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் செல்லும் இந்தக் குழந்தையின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி !!








இந்த நிகழ்ச்சியின் போது எனது மகனையும் மகளையும் என்னால் கவனிக்க முடியவில்லை. மனைவிதான் பார்த்துகொண்டு இருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் எனது மகன், நான் பூங்காவில் மற்ர குழந்தைகளுக்கு செய்து கொடுத்த அனைத்துப் பலூன்களும் வேண்டும் என்று கேட்டான். பூங்காவில் என்னைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததற்காக நான் அவனுக்கு சில பலூன் தொப்பிகளைச் செய்து கொடுத்தேன்.







Wednesday, October 12, 2005

பதிவு:06 நிலநடுக்கம்- இரங்கலும் வருத்தமும்

நிலநடுக்கம்/ பூகம்பத்தால் உயிரிழந்த பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்,பாகிஸ்தான் மற்றும் இந்தியா பகுதி மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு:http://in.rediff.com/news/quake05.html

சமீபகாலமாக உலகளவில் நடந்து வரும் இயற்கைச் சீற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. "Global Warming", காடுகள் அழிப்பு, வாகன மற்றும் ராசாயனக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுப்புரக் கேடுபோன்றவை கவனிக்கப்பட வேண்டியவை.

இதற்கு என்றே உலக அளவில் ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் தங்களின் ஆயுதக் குவியலுக்கு செலவிடும் தொகையில் ஒரு பகுதியை இந்த அமைப்பிற்கு கொடுத்தால் நல்லது.