Thursday, December 22, 2005
சென்னையில் பலூன் புயல்
பதிவு 11: சென்னையில் பலூன் புயல் கணேஷ்
ரொம்ப நாளாவே எனக்கு இந்த சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்திச்சு. பல முறை கூகிள் சாமிகிட்ட கேட்டும் அவர் ஒரே குப்பையாத்தான் கொட்டினார்.சரி நம்ம வேண்டும் முறைதான் (search string) சரியில்ல அப்படின்னு மனச தேத்திக்கிட்டேன்.இன்னைக்குத்தான் சரியான தகவல் கிடைச்சுச்சு. ஆமா நம்ம தொழிலுக்குப் போட்டியா ஏற்கனவே தமிழ்நாட்டில் இன்னொருத்தர் இருக்கார். அவர்தான் புயல் கணேஷ். இவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே போங்க.
http://www.angelfire.com/me2/puyal/
http://www.angelfire.com/me2/puyal/Homepage.html
5 வருசத்துக்கு முன்னாடியே இவரைப்பற்றி ஆனந்தவிகடனில் செய்தி வந்து இருக்கிறது.இவர்தான் இந்தியாவின் முதல் பலூன் SCULPTOR என்று சொல்கிறார். சரி சரி நம்ம இரசிகர்கள் எல்லாம் கோபப் படவேண்டாம். இவருக்கு 14 வருட மேஜிக் அனுபவமும் 5 வருட பலூன் அனுபவமும் இருக்கும் என்று தெரிகிறது. எனக்கு இந்த செய்தி மிகவும் சந்தோசமாக இருக்கு. இந்தியா போனால் இந்த பலூனை ரொம்ப பிரபலமாக்கலாம். கல்யாணம் காட்சிகள்ல குழந்தைகளை மகிழ்வித்து எதோ டீச் செலவுக்கு வச்சுக்கலாம். ஹலோ டீச்செலவுன்னு சொன்னவுன்ன எதோ தி.மு.க தலைவர் கருணாநிதி சொன்ன டீக்கணக்கு மாதிரி நினைக்காதீங்க அதெல்லாம் பெரிய டீ விவகாரம். நம்மளமாதிரி தெருவுல வித்தைகாட்டுற மகாசனங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது? நாயர் கடைச் சாயாதேன்.
சென்னையில இருக்கும் மக்கள் யாராவது புயலைப் பிடிக்கணுமின்னா இங்கே போய்ப் பிடிக்கலாம்.
MAGICIAN AND BALLOON SCULPTOR
48/46, MAHADEVAN STREET, WEST MAMBALAM,
CHENNAI 600 033 Tamil Nadu, India.
PHONE: 091-044-24749138 & 9444049138
மயில் அனுப்ப puyal [at] ஹாட்மெயில் டாட் காம்
அதுபோல டெல்லிவாலாக்கள் இவரைப் பிடிங்க.
VIJAY MENDIRATTA
Navsarjan Design Consultants
B-9, Sarita Vihar
Delhi, Delhi 110076
மயில் அனுப்ப revirut [at] யாஹூ டாட் காம்
இந்தியாவில் பலூன் மற்றும் அது சம்பந்தமான பொருட்கள் வாங்க:
Magic Wand
New Delhi, India
+91-11-5163-8821
மயில் அனுப்ப : magiczoomz [at] மெயில் டாட் காம்
Concepts
New Delhi, India
+91-11-2610-8217
மயில் அனுப்ப : plusflora [at] vsnl டாட் காம்
மேலும் விவரங்களுக்கு:
http://www.qualatex.com/pages/distributors.php
http://www.qualatex.com/balloons/fap_searchbycity.php
ரொம்ப முக்கியம்:
மேலெ உள்ள தகவல்கள் பல இணையப் பக்கத்தில் இருந்து எடுத்துப் போட்டது. எதுக்கும் மயில் அனுப்பி அல்லது தொலைபேசி தகவலை சரி பார்த்துக்கங்கோ. இதனால் வரும் எந்த வில்லங்கத்துக்கும் நான் பொறுப்பல்ல.
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************
Wednesday, November 23, 2005
பதிவு10: பலூன் Super Heroes
பலூனில் சாதரணமான நாய், தொப்பிகள் போன்றவை செய்வது சுலபம். ஆனால் மனித உருவங்கள் செய்வது சிறிது சிரமம். சமீபத்தில் நான் Ken Stillman-ன் பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டேன். இதில் பல பலூன் மற்றும் Clown களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. Ken Stillman உலக அளவில் அறியப்பட்டவர். பல நாடுகளுக்குச் சென்று பலூன் பயிற்சி வகுப்புகளை நடத்துபவர். அவரிடம் இருந்து பல விசயங்களைக் கற்றுக்கொண்டேன்.
அவரது பயிற்சியின் மூலம் நான் செய்த முதல் சூப்பர் ஹிரோக்கள்.
அவரைப் பற்றி மேலும் அறிய:
http://tmyers.com/aboutken.html
CARTOON BALLOONENCYCLOPEDIA & HITCH HIKING HATS புத்தகங்கள்
http://tmyers.com/book/stillman.html
Super Heroes Team 1 DVD ஆக கிடைகிறது:
http://tmyers.com/CD/stillman.html
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************
Friday, November 11, 2005
பதிவு 09:இந்த வருட Halloween படங்கள்
எனது மகன் தீயணைப்பு வீரனாகவும், எனது மகள் Halloween பூசணிக்காயாகவும் வேசம் கட்ட நான் குரோசே மார்க்ஸ் போன்ற ஒரு முகத்துடன்
---------------------------------------------------------------------
எங்களது வீட்டிற்கு முன்னால்
---------------------------------------------------------------------------------
நண்பரின் குழந்தைகளுடன் வணிகவளாகத்தில் மிட்டாய் வாங்க சென்றபோது
--------------------------------------------------------------------------
அலுவலகத்தில் குழந்தைகளுடன்
-------------------------------------------------------------------
அலுவலக நண்பர்களுடன்
---------------------------------------------------------------------------------------பூசணிக்காய் பெளலிங்
----------------------------------------------------------------------
அலுவலகத்தில் நடந்த பொடுசுகளுக்கான பேரணியில்
-----------------------------------------------------------------------
பள்ளித் தோழர் தோழிகளுடன் உலகத்தின் தலைசிறந்த தீயணைப்பு வீரன்
--------------------------------------------------------------------------
பள்ளியில் நடந்த பேரணியில்
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************
Tuesday, November 01, 2005
பதிவு:08 Balloons For Tips நிகழ்ச்சி
சென்றமாதம் அக்டோபர் 08,2005 தேதி Balloons Around the World சார்பாக எனது பலூன் சகாக்களுடன் Northgate Mall Center Court ல் Durham Rescue Mission க்காக காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை Balloons For Tips நிகழ்ச்சி செய்தோம்.
"பலூன் மேன் மைக்" , "பலூன் கிரேஸி கேரி" மற்றும் இந்த "பலூன் மாமா" மூவரும் காலை பத்து மணிக்கே வணிக வளாகத்திற்குச் சென்றுவிட்டோம். கேரி அவரது Sky Dancer ஐ கொண்டுவந்து இருந்தார். அதைப் பறக்க விட்டவுடன் அந்த இடத்திற்கு குழந்தைகள் கூட்டம் வரத்தொடங்கிவிட்டது. குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் ஆர்வமாக வந்து பலூன் பொம்மைகள் வாங்கிச் சென்றார்கள். அந்த வணிக வாளாகமே அன்று பலூன் தலைகளால் நிறைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் குழந்தைகள், நாங்கள் செய்து கொடுத்த பலூன் தொப்பிகளுடன் வலம் வந்து கொண்டு இருந்தார்கள். 11 மணிக்கு ஆரம்பித்த நாங்கள் இடைவிடாமல் மூன்று மணிவரை பலூன் செய்து கொடுத்தோம்.
எனது ஆஸ்தான புகைப்படக்காரர் எனது மனைவிதான். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் வீட்டில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் அன்று வரமுடியவில்லை. நாங்கள் மூவருமே பலூன் செய்வதில் ரொம்ப பிஸியாக போய்விட்டதால் அந்த நிகழ்ச்சியை போட்டோ எடுக்க மறந்து விட்டோம். நல்ல நிகழ்ச்சி .வந்தவர்கள் அனைவரும் கொடுத்த Tips மொத்தம் US $ 239.97 சேர்ந்து விட்டது. இந்த தொகை Durham Rescue Mission க்கு கொடுக்கப்பட்டு விட்டது.
உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
உலக அளவில் நடந்த இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
http://www.balloonhq.com/batw/photoindex.php?CCHK=1
Friday, October 14, 2005
பதிவு07: CRY பாலூன் பார்க்கும் குழந்தைகள்
CRY க்காக அதன் தன்னார்வத் தொண்டர்களும் நடைப்பயணத்தில் கலந்து கொள்ளவந்த ஆர்வலர்களும் North Cary Park ல் அக்டோபர் 01,2005 சனிக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து வரத்தொடங்கிவிட்டனர். நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று இருந்தேன். நிகழ்ச்சியின் அமைப்பாளர் சரவணன் எனக்காக ஒரு பூத் அமைத்திருந்தார்.
இது போல் பல பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மருதாணி, Clown , Majic Show என்று பல பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
என்னுடைய பூத்திலேயே "கைரேகை ஜோசியம்" சொல்லும் எனது நண்பர் ஒருவர் இருந்தார். நானும் அவரும் அந்த பூத்தைப் பகிர்ந்து கொண்டோம்.
ஒவ்வொரு பூத்திலும் ஒரு கட்டணம் வசூலிக்கப் பட்டது. மொத்தமாக பணம் செலுத்தி டோக்கன் வாங்கிக் கொண்டவர்கள் அந்த அந்த பூத்திற்குத் தகுந்தவாறு டோக்கன் கொடுத்து சேவையைப் பெற்றனர்.
வந்திருந்த அனைத்துக் கலைஞர்களும் தங்களின் நேரத்தை CRYக்காக இலவசமா வழங்கினர். எங்களால் சேமிக்கப்பட்ட அனைத்துப் பணமும் CRY அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்கள் $10 கொடுத்து அவர்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு T-Shirt கொடுக்கப்பட்டது.
30 ல் இருந்து 40 குழந்தைகள் வரை வந்து இருந்தனர். 11:30 மணிவாக்கில் CRY நடைப்பயணம் ஆரம்பித்தது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் நடைப்பயணத்தை ஆரம்பித்தனர். சுமார் அரைமணி நேரம் கழித்து ஒவ்வொருவராக நடைப்பயணத்தை முடித்துவிட்டு வரத் தொடங்கினர்.
நடைப்பயணதில் கலந்து கொண்ட குழந்தைகள் போக பூங்காவிற்கு சும்மா வந்த மற்ற குழந்தைகளும் பலூன் மாமவைச் சுற்றிக் கொண்டனர். ஆகா பலூன் மாமா வசமா மாட்டிகிட்டார்.
அன்று நான் வண்ணத்துப்பூச்சி தொப்பி , பூ, போர்க் கத்தி (sword) ,கிளி, அன்னப் பறவை மற்றும் பலவிதமான தொப்பிகளைச் செய்து கொடுத்தேன். வந்தவர்கள் மிகவும் தாராளமாக நிதி வழங்கினர்.
சுமார் இரண்டரை மணி நேரம் குழந்தைகளுடன் குழந்தைகளாக செலவழித்தேன்.
பிங்க் பூ தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் செல்லும் இந்தக் குழந்தையின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி !!
இந்த நிகழ்ச்சியின் போது எனது மகனையும் மகளையும் என்னால் கவனிக்க முடியவில்லை. மனைவிதான் பார்த்துகொண்டு இருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் எனது மகன், நான் பூங்காவில் மற்ர குழந்தைகளுக்கு செய்து கொடுத்த அனைத்துப் பலூன்களும் வேண்டும் என்று கேட்டான். பூங்காவில் என்னைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததற்காக நான் அவனுக்கு சில பலூன் தொப்பிகளைச் செய்து கொடுத்தேன்.
Wednesday, October 12, 2005
பதிவு:06 நிலநடுக்கம்- இரங்கலும் வருத்தமும்
மேலும் விவரங்களுக்கு:http://in.rediff.com/news/quake05.html
சமீபகாலமாக உலகளவில் நடந்து வரும் இயற்கைச் சீற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. "Global Warming", காடுகள் அழிப்பு, வாகன மற்றும் ராசாயனக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுப்புரக் கேடுபோன்றவை கவனிக்கப்பட வேண்டியவை.
இதற்கு என்றே உலக அளவில் ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் தங்களின் ஆயுதக் குவியலுக்கு செலவிடும் தொகையில் ஒரு பகுதியை இந்த அமைப்பிற்கு கொடுத்தால் நல்லது.
Tuesday, September 20, 2005
Friday, September 16, 2005
பதிவு 04: அறிவிப்பு Upcoming Events
CRY சேவை அமைப்புக்காக நடத்தப்படும் Walk For Child Rights 2005 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்காக பலூன் நிகழ்ச்சி (Show) செய்ய உள்ளேன்.
அதுபோல் Balloons Around the World சார்பாக எனது பலூன் சகாக்களுடன் Northgate Mall Center Court ல் அக்டோபர் 08,2005 தேதி Durham Rescue Mission க்காக காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை Balloons For Tips நிகழ்ச்சி செய்ய உள்ளோம்.