
சென்றமாதம் அக்டோபர் 08,2005 தேதி Balloons Around the World சார்பாக எனது பலூன் சகாக்களுடன் Northgate Mall Center Court ல் Durham Rescue Mission க்காக காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை Balloons For Tips நிகழ்ச்சி செய்தோம்.
"பலூன் மேன் மைக்" , "பலூன் கிரேஸி கேரி" மற்றும் இந்த "பலூன் மாமா" மூவரும் காலை பத்து மணிக்கே வணிக வளாகத்திற்குச் சென்றுவிட்டோம். கேரி அவரது Sky Dancer ஐ கொண்டுவந்து இருந்தார். அதைப் பறக்க விட்டவுடன் அந்த இடத்திற்கு குழந்தைகள் கூட்டம் வரத்தொடங்கிவிட்டது. குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் ஆர்வமாக வந்து பலூன் பொம்மைகள் வாங்கிச் சென்றார்கள். அந்த வணிக வாளாகமே அன்று பலூன் தலைகளால் நிறைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் குழந்தைகள், நாங்கள் செய்து கொடுத்த பலூன் தொப்பிகளுடன் வலம் வந்து கொண்டு இருந்தார்கள். 11 மணிக்கு ஆரம்பித்த நாங்கள் இடைவிடாமல் மூன்று மணிவரை பலூன் செய்து கொடுத்தோம்.
எனது ஆஸ்தான புகைப்படக்காரர் எனது மனைவிதான். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் வீட்டில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் அன்று வரமுடியவில்லை. நாங்கள் மூவருமே பலூன் செய்வதில் ரொம்ப பிஸியாக போய்விட்டதால் அந்த நிகழ்ச்சியை போட்டோ எடுக்க மறந்து விட்டோம். நல்ல நிகழ்ச்சி .வந்தவர்கள் அனைவரும் கொடுத்த Tips மொத்தம் US $ 239.97 சேர்ந்து விட்டது. இந்த தொகை Durham Rescue Mission க்கு கொடுக்கப்பட்டு விட்டது.
உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
உலக அளவில் நடந்த இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
http://www.balloonhq.com/batw/photoindex.php?CCHK=1
2 comments:
nalla visayam ellam seyuringa baloon mama.unga thalam pathi niraya pearuku theriyatathala inga varathilanu ninakiran.
Shop online today. Forget driving to the mall when you can just click the mouse and order from your favorite store. No traffic to deal with
Post a Comment