Thursday, March 05, 2015

Bren Bataclan - Street Artist

ரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு இப்படி ஒரு மனிதர் http://www.bataclan.com/ பற்றி தெரிய வந்தது. என் மகனின் பள்ளிக்கு வந்து கடந்த இரண்டு நாட்களாக அங்குதான் இருக்கிறார்.   https://twitter.com/smileproject/media

சாலையோர கலைஞர் என்ற‌ அடையாளத்துடன் இவர் செய்துவரும் விசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவர் செல்லும் இடங்களில் படங்களை வரைந்து அதனோடு ஒரு செய்தியையும் வைத்துவிடுவார். உதாரணத்திற்கு "யாரவது ஒரு புது நபரிடம் புன்னகை செய்" என்று செய்தி இருக்கும். படத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.

http://bataclan.com/smile_boston_project_secondary/sbp_fedback.html

இவரின் உழைப்பால் (ஓவியம்) பல மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் பயன்பெறுகின்றன. ஓவியங்களை இவர் அவர்களுக்கு இலவசமாக கொடுத்துவிடுவார். அந்த நிறுவனங்கள் அதை ஏலத்தில்விட்டு பணம் பெற்றுக்கொள்வார்கள்.

பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு படம் வரைதல், பள்ளிக்கு பணம் திரட்ட உதவுதல் போன்றவற்றை தொடர்ந்து செய்கிறார்.
http://bataclan.com/Presentations_Workshops.html

இவரைப்பற்றிய  cbsnews
http://www.cbsnews.com/videos/spreading-hope-with-art/

இவரைப்பற்றிய  washingtonpost
http://www.washingtonpost.com/entertainment/theater_dance/artist-brings-a-smile-to-faces-with-free-artwork/2013/07/25/f6847ce6-f2f4-11e2-bdae-0d1f78989e8a_story.html

இவரது படங்களில் பெரிய ஒற்றைக்கோட்டுச் சிரிப்பும், பெரிய கண்+ சின்ன கண் முகங்களும் தனி முத்திரை.


No comments: