Wednesday, August 31, 2005

பதிவு 03: பலூன் அடிப்படைகள் (Basics)

எல்லோருக்கும் பலூன் மாமாவின் வணக்கம்.

முதலில் நான் பலூன் செய்வது பற்றி எழுத நினைத்தேன். தமிழில் இதற்கு ஏதேனும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இணையத்தில் கடல் போல் விவரங்கள் உள்ளன. தற்போது நான் எழுத வேண்டும் என்றால் 80% மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் ஒரு சில விஷயங்களை தமிழில் பகிர்ந்து கொள்ள ஆசை.

பலூன் பொம்மைகள் செய்வதற்கு முதலில் பொறுமை வேண்டும். அப்புறம் இருக்காத என்ன? செய்து கொண்டு இருக்கும் போதே பட் பட் என்று உடைந்து போய்விடும். அதுவும் குழந்தைகளின் முன்னால் செய்து கொண்டு இருக்கும் போது பலமுறை நாம் பலூனை உடைத்துவிட்டால் அவர்கள் நம்மை ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள்...

என்னா மேன் ஒரு பலூன் கூட உருப்படியா செய்யத்தெரியல பெரிய பீலா விடுக்கினு எங்ககிட்ட பிலிம் காட்ட வந்துட்ட ...

என்பது போன்ற ஒரு பார்வை பார்ப்பார்கள்.மேலும் இதில் எது செய்தாலும் அதிக பட்சம் 3 நாட்கள்தான் இருக்கும். அதன்பின் காற்றுப்போய் உருக்குலைந்துவிடும்.

பலூன் பொம்மைகள் செய்வதற்கு என்ன என்ன பொருட்கள்
**அவசியமான ** தேவை?

1.Pump
2.பலூன்கள்

அம்புட்டுத்தான் :-)

பலூனின் வகைகள் (Shapes or Variety ):

Pencil type
Rounds
Geo-blossoms
Hearts
Bee-bodies (321Q)

etc..

மேல் சொன்னவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படும் பலூன் வகை Pencil type. இது 160,260,350 என்ற பல அளவுகளில் வருகிறது. அவற்றில் முக்கியமானது 260 Q எனப்படுவது.

2" சுற்றளவு 60'' நீளம் அதுவே 260Q என்பதன் அர்த்தம்.
அது போல் 1" சுற்றளவு 60" நீளம் = 160Q
3" சுற்றளவு 50" நீளம் = 350Q



செய்யப்போகும் பொம்மை/உருவத்திற்குத் தகுந்தவாறு பாலூன் வகைகள் பயன்படுத்தப்படும்.

260Q பலூனே பெறும்பாலும் பலூன் பொம்மைகள் செய்ய பயன்படுகிறது. round,heart மற்றும் பிற வகைகள் இதனுடன் சேர்த்தே பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு 260Q வில் ஒரு மனிதனின் உடம்பு முழுவதையும் செய்துவிடலாம். ஆனால் மனித தலைகக்கு heart shape தேவைப்படும்.
பல்வேறு பலூன் வகைகளை இங்கு காணலாம் --> TMyers Balloon Index

அதுபோல் pump லும் பலவகைகள் உண்டு. கை pump , electric pumps..etc
பல்வேறு Pump வகைகளை இங்கு காணலாம் --> TMyers Pump Index


7 comments:

NambikkaiRAMA said...

எனக்கும் கத்துக்க ஆசைதான். நீங்க USல் அன்றோ இருக்கிறீர்.

Unknown said...

பாசிட்டிவ் ராமா,
இப்படி பாசிட்டிவான பெயர வச்சுக்கிட்டு இப்படி சொல்லக்கூடாது :-)
இந்தியாவில் பலூன் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.பாலூனும் பம்பும் கிடைத்துவிட்டால் போதும்.
இணையத்தில் பல நல்ல தகவல்கள் உள்ளது.

Anonymous said...

test

பரஞ்சோதி said...

என்ன பலூன் மாமாவை காணவில்லை என்று என் மகள் சக்தி உங்களைத் தேடுகிறாள்.

Anonymous said...

It is interesting.
Keep it up.

Anonymous said...

உங்கள் பதிவுகள் நன்றாகவும், புதுமையாகவும் இருக்கின்றன. நன்றி!

Unknown said...

பரஞ்சோதி,
இதோ வந்துட்டே இருக்கேன் :-))

தங்கமணி, அனானிமஸ் ,
வாழ்த்துகளுக்கு நன்றி