Tuesday, September 20, 2005

பதிவு 05: Office Picnic Photos Aug 23,2005

Office Picnic Photos Aug 23,2005








































Friday, September 16, 2005

பதிவு 04: அறிவிப்பு Upcoming Events

பலூன் மாமாவை இங்கு பார்க்கலாம்

CRY சேவை அமைப்புக்காக நடத்தப்படும் Walk For Child Rights 2005 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்காக பலூன் நிகழ்ச்சி (Show) செய்ய உள்ளேன்.

Date: Saturday, Oct 1st, 2005, Time: 10:30 AM Venue: North Cary Park, Cary, NC. We will be collecting tips for CRY

அதுபோல் Balloons Around the World சார்பாக எனது பலூன் சகாக்களுடன் Northgate Mall Center Court ல் அக்டோபர் 08,2005 தேதி Durham Rescue Mission க்காக காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை Balloons For Tips நிகழ்ச்சி செய்ய உள்ளோம்.

Northgate Mall for Oct 8,2005 Time 11:00 AM - 3:00PM for Balloons Around the World ::We will be collecting tips for Durham Rescue Mission.

Wednesday, August 31, 2005

பதிவு 03: பலூன் அடிப்படைகள் (Basics)

எல்லோருக்கும் பலூன் மாமாவின் வணக்கம்.

முதலில் நான் பலூன் செய்வது பற்றி எழுத நினைத்தேன். தமிழில் இதற்கு ஏதேனும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இணையத்தில் கடல் போல் விவரங்கள் உள்ளன. தற்போது நான் எழுத வேண்டும் என்றால் 80% மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் ஒரு சில விஷயங்களை தமிழில் பகிர்ந்து கொள்ள ஆசை.

பலூன் பொம்மைகள் செய்வதற்கு முதலில் பொறுமை வேண்டும். அப்புறம் இருக்காத என்ன? செய்து கொண்டு இருக்கும் போதே பட் பட் என்று உடைந்து போய்விடும். அதுவும் குழந்தைகளின் முன்னால் செய்து கொண்டு இருக்கும் போது பலமுறை நாம் பலூனை உடைத்துவிட்டால் அவர்கள் நம்மை ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள்...

என்னா மேன் ஒரு பலூன் கூட உருப்படியா செய்யத்தெரியல பெரிய பீலா விடுக்கினு எங்ககிட்ட பிலிம் காட்ட வந்துட்ட ...

என்பது போன்ற ஒரு பார்வை பார்ப்பார்கள்.மேலும் இதில் எது செய்தாலும் அதிக பட்சம் 3 நாட்கள்தான் இருக்கும். அதன்பின் காற்றுப்போய் உருக்குலைந்துவிடும்.

பலூன் பொம்மைகள் செய்வதற்கு என்ன என்ன பொருட்கள்
**அவசியமான ** தேவை?

1.Pump
2.பலூன்கள்

அம்புட்டுத்தான் :-)

பலூனின் வகைகள் (Shapes or Variety ):

Pencil type
Rounds
Geo-blossoms
Hearts
Bee-bodies (321Q)

etc..

மேல் சொன்னவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படும் பலூன் வகை Pencil type. இது 160,260,350 என்ற பல அளவுகளில் வருகிறது. அவற்றில் முக்கியமானது 260 Q எனப்படுவது.

2" சுற்றளவு 60'' நீளம் அதுவே 260Q என்பதன் அர்த்தம்.
அது போல் 1" சுற்றளவு 60" நீளம் = 160Q
3" சுற்றளவு 50" நீளம் = 350Q



செய்யப்போகும் பொம்மை/உருவத்திற்குத் தகுந்தவாறு பாலூன் வகைகள் பயன்படுத்தப்படும்.

260Q பலூனே பெறும்பாலும் பலூன் பொம்மைகள் செய்ய பயன்படுகிறது. round,heart மற்றும் பிற வகைகள் இதனுடன் சேர்த்தே பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு 260Q வில் ஒரு மனிதனின் உடம்பு முழுவதையும் செய்துவிடலாம். ஆனால் மனித தலைகக்கு heart shape தேவைப்படும்.
பல்வேறு பலூன் வகைகளை இங்கு காணலாம் --> TMyers Balloon Index

அதுபோல் pump லும் பலவகைகள் உண்டு. கை pump , electric pumps..etc
பல்வேறு Pump வகைகளை இங்கு காணலாம் --> TMyers Pump Index


Friday, August 19, 2005

பதிவு 02: பலூன் மாமா அறிமுகம்


தமிழ் வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம். உங்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசை. பலூன் ஊதுவது மூலம் ஏதும் சாதித்துவிடமுடியாது. ஆனால், குழந்தைகளின் மனங்களை கொள்ளை கொள்ள முடியும்.

அரசியல்,சினிமா,இலக்கியம்,சமூகம் மற்றும் பல உலக விசயங்களை எழுதி விவாதித்துவரும் நீங்கள் இந்த பலூன் மாமாவையும் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழ்மணத்தில் பலூன் மாமாவுக்கு இடம் கொடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் தமிழ்மணத்தில் ஏற்கனவே கொடிகட்டிப் பறக்கும் சக எழுத்தாளர்களுக்கும் வணக்கங்கள்.

அனைவருக்கும் பலூன் மாமாவின் பாலூன் வாழ்த்துக்கள்.

பதிவு 01: எனது குடும்பம்

Thursday, August 18, 2005

test